Mangalore High Speed Express will stop at Avadi : ஆவடி ரயில் நிலையத்தில் இன்று முதல் மங்களூரு அதி விரைவு ரயில் நின்று செல்லும்

சென்னை: Mangalore High Speed Express will stop at Avadi railway station from today : ஆவடி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) அதி விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆவடியில் நடைபெறும் தொடக்க விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

சென்னையிலிருந்து நாள்தோறும் மங்களூருவுக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது (High-speed trains run daily from Chennai to Mangalore). இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. பின்னர் மங்களூரில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு சென்னையை வந்தடைகிறது. இந்த அதி விரைவு ரயில் 6 மாதத்திற்கு சோதனை அடிப்படையில் ஆவடி ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும்.

இதனையடுத்து சென்னை சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் (Departs Chennai Central Railway Station at 4.20 PM) மங்களூரு அதி விரைவு ரயில் ஆவடியில் மாலை 4.48 மணிக்கு நின்று, 4.50 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதனைத் தொடர்ந்து மாலை 6.13 மணி முதல் 6.15 மணி வரை காட்பாடியிலும், 7.33 மணி முதல் 7.35 வரை ஜோலார்பேட்டையிலும், 8.14 மணி முதல் 8.15 மணி வரை மொரப்பூரிலும், 9.12 மணி முதல் 9.15 வரை சேலம் சந்திப்பிலும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை ஈரோடு சந்திப்பிலும், திருப்பூரில் 11.03 மணிமுதல் 11.05 வரை நின்று செல்லும்.

அதேபோல் மங்களூரில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் (Departs Mangalore at 4.55 PM) அதி விரைவு ரயில், மறுநாள் காலை 8.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் காலை 6.58 மணி முதல் 7 மணி வரைஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதே போல தமிழகத்தின் மற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும் நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. இதன் தொடக்க விழா இன்று மாலை ஆவடி ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வி.முரளிதரன், மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சர் எல்.முருகன், தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.