Cloudburst landslide : இமாச்சல், ஒடிசா, உத்தரகண்ட் மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

பள்ளத்தாக்கு மாநிலமான ஜம்மு காஷ்மீரிலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தில்லி: இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. (Cloudburst landslide) மேக வெடிப்பு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் குலுங்கியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தில் ஒடிசா தத்தளிக்கிறது.

மூன்று வட இந்திய மாநிலங்களில் மழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா (Himachal Pradesh, Uttarakhand, Odisha) ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 31 பேரில் 22 பேர் இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசம் (Himachal Prades): நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் (8 people from the same family) உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால், மலைகள் சரிந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காங்க்ரா மாவட்டத்தில் சக்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ரயில் பாலம் முற்றிலும் இடிந்து விழுந்தது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்க்ரா, சம்பா, மண்டி, குலு, சிம்லா, சிர்மவுர், பிலாஸ்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இமாச்சல பிரதேசத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் (Uttarakhand): அண்டை மாநிலமான இமாச்சல பிரதேசத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு போல் மழை பெய்து வருவதால், அனைத்து ஆறுகளும் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கனமழையால் பாலங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. டேராடூன் மாவட்டத்தில் உள்ள சர்கெட் கிராமம் அருகே மேக வெடிப்பு காரணமாக சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன.

ஒடிசா (Odisha): பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாநதி வெள்ளத்தால் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் மட்டும் 4 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை வாழ‌ முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.