Jio outage: மும்பையில் 2 நாட்கள் ஜியோ சேவை முடக்கம்.. 2,500 பேர் பரிதவிப்பு

மும்பை: ரிலையன்ஸ் ஜியோவின் சுமார் 2,500 வாடிக்கையாளர்கள் இணையம் மற்றும் தொலைக்காட்சி கேபிள் இணைப்பில் சுமார் இரண்டு நாட்களுக்கு ஒரு செயலிழப்பை சந்தித்தனர். இதனால் அதிருப்தியடைந்த துணை விற்பனை மையத்தின் ஊழியர் ஒருவர் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை வெட்டினார். அந்த ஊழியர் மீது கோரேகான் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ அதிகாரபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

ரிலையன்ஸ் ஜியோவின் விற்பனையாளரின் மூத்த தொழில்நுட்ப வல்லுநரான ராஜேந்திர மோஹிதேவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விற்பனையாளர் சுமார் 7 ஆண்டுகளாக கோரேகான்-தஹிசர் பெல்ட்டில் ஃபைபர் கேபிள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 27ம் தேதி மாலை 4.30 மணியளவில், கோரேகானில் உள்ள எஸ்வி சாலையில் ஒரு தளம் செயலிழந்துவிட்டதாக ஜியோ சர்வர்களிடமிருந்து மோஹித் எச்சரிக்கையைப் பெற்றார். மோஹித் மற்றும் அவரது ஊழியர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் ராம் மந்திர் மேம்பாலம் அருகே உள்ள ஒரு தொழிற்பேட்டையின் மொட்டை மாடியில் ஏறினர். அங்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அறுந்து கிடப்பதைக் கண்டனர். அந்த குழு அதனை சரிசெய்துவுிட்டு சென்றது. ஆனால் அடுத்த நாளே அந்த தளத்தில் மீண்டும் ஜியோ சேவை செயலிழந்தது.

கோரேகானின் ஜவஹர் நகரில் மற்றொரு ஆப்டிகல் ஃபைபர் கேபிள் வெட்டப்பட்டதை குழு கண்டறிந்து இதனை சரிசெய்தது. இதனால் 2,500 வாடிக்கையாளர்களை பாதித்ததாக அந்த வழக்குப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பணியாளரான பர்வேஸ் கான் விசாரணை செய்தததில், ஃபைபர் கேபிளை வெட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து கான் மீது கிரிமினல் மிரட்டல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Around 2,500 customers of Reliance Jio suffered an outage in internet and television cable connectivity for about two days after a disgruntled staffer of a sub-vendor went about cutting Optical Fiber Cables.