National Geoscience Awards: தேசிய புவிஅறிவியல் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுடெல்லி: Mines Ministry Invites Nominations for National Geoscience Awards -2022. அடிப்படை புவி அறிவியல், சுரங்கத் தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பங்களிப்பு செய்ததற்கான தேசிய புவிஅறிவியல் விருதுகள் – 2022-க்கு சுரங்கத் துறை அமைச்சகம் பரிந்துரைகளை வரவேற்கிறது.

வாழ்நாள் சாதனைக்கான தேசிய புவி அறிவியல் விருது:
தேசிய புவி அறிவியல் விருதுகளின் 2-ஆவது பட்டியலில் உள்ள துறைகளில் ஏதாவது ஒன்றில் தமது வாழ்நாளில் சிறந்த பங்களிப்பு செய்த தனிநபர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ஐந்து லட்சம் ரூபாயும், சான்றிதழும் அளிக்கப்படும்.

தேசிய புவி அறிவியல் விருது:
தேசிய புவி அறிவியல் விருதுகளின் 2-வது பட்டியலில் உள்ள துறைகளில் ஏதாவது ஒன்றில் சிறந்த பங்களிப்பை செய்த தனிநபர்கள் 10 பேருக்கு அல்லது குழுவினருக்கு தேசிய புவி அறிவியல் விருது அளிக்கப்படுகிறது. இவ்விருதுடன் மூன்று லட்சம் ரூபாயும், சான்றிதழும் அளிக்கப்படும். இவ்விருதை குழுவினர் பெற்றால் அவர்களுக்கு பரிசுத் தொகை சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.

தேசிய இளையோர் புவி அறிவியல் விருது:
புவிஅறிவியலின் ஏதாவது ஒரு துறையின் ஆராய்ச்சியில் சிறப்பிடம் பெற்ற 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியின்படி, 35 வயதிற்கு கீழே உள்ள தனிநபர் ஒருவருக்கு இளையோர் புவி அறிவியலாளர் விருது வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சிக்காக ஐந்து லட்சம் ரூபாயும், சான்றிதழும் அளிக்கப்படும்.

பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்- 30 நவம்பர் 2022.

இதுகுறித்த தகவலை https://www.awards.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம்.