Introduction of digital currency: டிசம்பர் 1ம் தேதி முதல் 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்

புதுடெல்லி: Introduction of digital currency in 4 cities from 1st December. டிசம்பர் 1ம் தேதி முதல் 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக ரிசர்வ் வங்கியின் உதவியுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது‌. அதன்படி வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 4 முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகிறது.

2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, ரிசர்வ் வங்கியின் உதவியுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி டிஜிட்டல் ரூபாய் சோதனை அடிப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து தற்போது டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்த அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ரூ.1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூர், புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களில் இந்த டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து அகமதாபாத், லக்னோ, சிம்லா, பாட்னா, இந்தூர், கவுகாத்தி ஆகிய நகரங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் டிஜிட்டல் முறையில் c₹-R என்ற குறியீடு பயன்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் கரன்சி யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ ஆகிய 4 வங்கிகளில் அறிமுகமாக உள்ளது. டிஜிட்டல் கரன்சி சோதனை முறையின் போது 8 வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.