NIA Director surprise meeting with DGP Shailendra Babu: டிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் திடீர் சந்திப்பு

சென்னை: NIA Director surprise meeting with DGP Shailendra Babu. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் இன்று சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவையில் கடந்த மாதம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் அருகே ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது குக்கர் வெடிகுண்டு எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதனையடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஷாரிக் எடுத்து வந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரித்து வரும் நிலையில் தீவிரவாதி ஷாரிக், கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வந்து தங்கிச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் என்ஐஏ அமைப்பின் இயக்குனர் தின்கர் குப்தா, இன்று மாலை டிஜிபி அலுவலகம் வந்து, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் தீவிரவாதிகளின் நடமாட்டம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

It has been reported that NIA Director has met Tamil Nadu DGP Shailendra Babu today.