Idol immersion : துர்க்கை சிலை கரைப்பின் போது நீரில் மூழ்கிய 8 பேர் பலி

West Bengal: நேற்று இரவு 8.30 மணியளவில் சிலையை ஆற்றில் கரைக்க ஏராளமானோர் ஆற்றில் இறங்கினர். மேலும் சிலர் ஆற்றங்கரையில் நின்று கொண்டு சிலையைக் கரைப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதில் ஆற்றின் கரையோரம் இருந்த மக்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஜல்பைகுரி: Idol immersion : துர்கா சிலை கரைக்கும் போது ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அன்னோ பகுதியில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

நவராத்திரி பண்டிகையின் (Navratri festival) போது, ​​மேற்கு வங்காளத்தில் உள்ளவர்கள் ஆராதிஸ்தரா துர்கா தேவி சிலையை வழிபடுவது வாடிக்கை. நவராத்தியின் போது 9 நாட்களுக்குப் பிறகு, துர்கா தேவி சிலைகள் ஆறுகள், கிணறுகள் மற்றும் வாய்க்கால்களில் கரைக்கப்படுகின்றன. விஜயதசமியையொட்டி நேற்று ஜலபை குரி அருகே உள்ள மாலா ஆற்றில் துர்கா தேவியை கரைப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். நேற்று இரவு 8.30 மணியளவில் சிலையை ஆற்றில் கரைக்க ஏராளமானோர் ஆற்றில் இறங்கினர். மேலும் சிலர் ஆற்றங்கரையில் நின்று கொண்டு சிலையைக் கரைப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதில் ஆற்றின் கரையோரம் இருந்த மக்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றின் கரையோரத்தில் நின்றிருந்த மக்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் காட்சியை ஒரு சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

காப்பாற்ற முடியாத அளவுக்கு தண்ணீர் வேகமாக பெருக்கெடுத்த‌தால், பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) மற்றும் மாநில மீட்பு படையினர் (SDRF) குழுவினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் நான்கு பெண்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டது. 13 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர், அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர் (50 people have been rescued). எனினும், மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று ஜல்பைகுரி மாவட்ட ஆட்சியர் மௌமிதா கோதாரா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மாலா சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ பலுசிக் பராக் கவலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பதிலளித்த மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏ சுவேந்து (West Bengal Legislative Assembly Leader of Opposition and BJP MLA Suvendu) அதிகாரியும், கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.