Actor Lokesh Rajendran dies by suicide: சீரியல் நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை

சென்னை: Vidathu Karuppu child actor Lokesh Rajendran dies by suicide. விடாது கருப்பு குழந்தை நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 1996ம் ஆண்டு ஒளிபரப்பான ‘விடாது கருப்பு’ படத்தில் ராசு கதாபாத்திரத்தை நடிகர் லோகேஷ் நடித்திருந்தார். மர்மதேசம் என்ற மர்மத் தொகுப்பின் 5 பாகங்களில் இந்தத் தொடரும் ஒன்று.

மர்மதேசம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும். இதனை இயக்குனர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்திரராஜன் கதை எழுதியிருந்தார். இந்த தொலைக்காட்சி தொடர் 1995 லிருந்து 1998 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. பின்பு ராஜ் தொலைக்காட்சி 1998லிருந்து 2001 வரை ஒளிபரப்பியது. தற்போது இத்தொடரை வசந்த் தொலைக்காட்சி 3 ஆகஸ்ட் 2015 லிருந்து ஒளிப்பரப்பு செய்துகொண்டுள்ளது. அதனை தொடந்து சன் டிவியில் 2020 ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியிலிருந்து ஓளிபரப்பட்டது.

இந்த நிலையில் மர்மதேசம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற தமிழ் தொலைக்காட்சி நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.

நடிகர் லோகேஷின் தந்தை தனது மகன் 150 க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் 15 படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் லோகேஷ்- அவரது மனைவிக்கும் இடையே சில தவறான புரிதல் இருந்தது தெரிந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு அவரது மனைவியிடமிருந்து விவாகரத்துக்கான சட்ட நோட்டீஸ் வந்ததால், அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, பேருந்து நிலையத்தின் வழியாக சென்றவர்கள் ஒருவர் அசவுகரியமாக இருப்பதைக் கண்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அன்று இரவு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், லோகேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், சென்னை மொஃபுசில் பேருந்து நிலையத்தில் அடிக்கடி தூங்கி வந்ததாகவும் தெரிவித்தனர்.

மறைந்த நடிகருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.