Hyderabad’s name will be change : ஹைதராபாத் பாக்யநகராக மாற்றப்படும்: பாஜக தலைவர் சூசகம்

Raghubar Das : தெலுங்கானாவில் டிஆர்எஸ் ஆட்சியில் பொதுமக்கள், பெரிய தொழிலதிபர்கள் உள்பட யாரும் திருப்தி அடைந்திருப்பதாக தெரியவில்லை.

தெலுங்கானா: Hyderabad’s name will be change :: பாஜக ஆளும் மாநிலங்களில் பெரும்பாலான ஊர்கள் மற்றும் பழங்களின் பெயர்களை மாற்றிய பல உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். டிராகன் ஃப்ரூட் பெயரை மாற்றுவது, உத்தரபிரதேசத்தில் உள்ள பல நகரங்களின் பெயரை மாற்றுவது என பல விஷயங்களை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது பாஜகவின் பார்வை ஹைதராபாத் மீதுள்ளதால், அதன் பெயரை பாக்யாநகர் என மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பாக்யலட்சுமி கோவிலுக்கு சென்ற ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபர்தாஸ், ஹைதராபாத் நகரின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும் என்று சூசகமாக தெரிவித்தார். தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயர் மாற்றப்படும் என்றார்.

தெலுங்கானாவில் உள்ள டிஆர்எஸ் ஆட்சியில் சாமானியர்களோ, பெரிய தொழிலதிபர்களோ யாரும் திருப்தியாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசுக்கு மக்கள் நலனை விட குடும்ப அரசியலே பெரியதாக தெரிகிறது. இந்த அரசு மக்கள் பிரச்சனைகளில் அக்கறை காட்டவில்லை. இதனால் இங்குள்ள மக்கள் பாஜக பக்கம் சாய்ந்துள்ளனர். குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மோடி இங்கு வருவார் என்றார்.

உதய்பூரில் கன்னய்லால் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் பேசிய அவர், கன்ன‌ய்லால் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருந்த கொலையாளிகளால் கொல்லப்பட்டவர். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். பாஜக எப்போதும் சகோதரத்துவத்தை போற்றும் என்றார்.
ஜார்க்கண்ட் மக்களும், இங்குள்ள முஸ்லிம் சமூகமும் ஒவைசியை நிராகரித்துள்ளனர். ஜார்க்கண்டில் ஒவைசியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு இந்திய அரசியலில் இடமில்லை என்றார் ரகுபர்தாஸ்.