Governor and Chief Minister : பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

பெங்களூரு : Governor and Chief Minister wish Prime Minister Modi on his birthday :பிரதமர் மோடிக்கு ஆளுநர் தாவர்சந்த்கெலாட், முதல்வர் பசவராஜ்பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 72-ஆவது பிறந்தநாள் (72nd birthday of Prime Minister Narendra Modi) சனிக்கிழமை நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. பாஜக சார்பில் 2 வாரங்களுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கர்நாடகம் முழுவதும் சனிக்கிழமை பெங்களூரு, மைசூரு, தும்கூரு, மங்களூரு உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். பெங்களூரில் சனிக்கிழமை நடந்த ரத்ததான முகாமில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டு ரத்ததானம் செய்தார். சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

இதனிடையே, பிரதமர் மோடிக்கு ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ்பொம்மை, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகௌடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா (Governor Thavarchand Khelat, Chief Minister Basavarajpommai, Former Prime Minister HD Deve Gowda, Former Chief Minister Yeddyurappa) உள்ளிட்ட கர்நாடகத்தின் முக்கியமான தலைவர்கள், அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் தாவர்சந்த்கெலாட் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்,”இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தங்களின் துடிப்பான தலைமை (Vibrant leadership) மற்றும் வழிகாட்டுதலில் நமது நாடு வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கட்டும். இன்னும் பல ஆண்டுகளுக்கு நாட்டுக்கு சேவை செய்ய கடவுள் தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளை அளிக்க பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பசவராஜ்பொம்மை வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்,”ஆகச் சிறந்த தலைவரும், நாட்டின் பெருமைமிகு பிரதமருமான மோடிக்கு மாநில‌ மக்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் வாய்த்திருக்க ஆண்டவனை பிரார்த்திருக்கிறேன்” (I pray Lord for long life and good health). என்று கூறியுள்ளார்.