Football Fans Clash In Kerala: அர்ஜென்டினா வெற்றியால் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் பயங்கர மோதல்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் (Football Fans Clash In Kerala) கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அங்கு ஒவ்வொரு முறையும் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும்போது கேரளாவில் அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகளின் ரசிகர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து அணிகளுக்கு ஆதரவான வால் போஸ்டர் ஒட்டுவது பேனர் வைத்து மொத்த கேரளாவை திருவிழா போன்று கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்காக கோட்டயம், திருவனந்தபுரம் பகுதிகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் கட்அவுட் வைத்தனர். அவர்களுக்கு போட்டியாக பிரேசில் வீரர் நெய்மருக்கு பிரமாண்டமான கட்அவுட் வைத்தனர்.

கேரளாவில் மோதிக்கொண்ட கால்பந்தாட்ட வீரர்கள்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் அர்ஜென்டினா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மெஸ்சி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
அதே போன்று கேரளா மாநிலம், கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கால்பந்து ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். அதன்படி கால்பந்து ரசிகர்கள் 3 பேரை மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கூட்டத்தை கட்டுப்படுத்த சென்றனர். ஆனால் அங்கு போலீசாரையும் விட்டு வைக்காத கால்பந்து ரசிகர்கள் சராமாரியாக தாக்கினர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனால் கூடுதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் உலக கால்பந்து வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Robbery Of Rs 20 Lakh By Pretending To Be An Nia: என்.ஐ.ஏ. அதிகாரியாக நடித்து ரூ.20 லட்சம் கொள்ளை வழக்கில் 6 பேர் சரண்

முந்தைய செய்தியை பார்க்க:Cant Sleep Peacefully Due To Sound Of Chickens Crowing: அதிகாலையில் கூவும் கோழியால் தூக்கம் போச்சு: ஐ.டி. ஊழியர் காவல் நிலையத்தில் புகார்