Firing on Health Minister: சுகாதார அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு.. மார்பில் பாய்ந்த குண்டு

புவனேஸ்வர்: Odisha Health Minister who was shot at airlifted to Bhubaneswar hospital. ஒடிசா சுகாதார அமைச்சர் மீது போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே போலீஸ்காரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதில் படுகாயமடைந்த ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் இன்று விமானம் மூலம் புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் நவீன் பட்நாயக் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சுகாதாரத்துறை செயலர் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, நேரில் பார்த்த சாட்சியான வழக்கறிஞர் ராம் மோகன் ராவ், ஒடிசா அமைச்சரை நோக்கி போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவம் காந்தி சௌக்கில் மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. இதனால் அவருக்கு இடது மார்பில் புல்லட் காயம் ஏற்பட்டதாக ராம் மோகன் ராவ் கூறினார்.

மேலும் பொதுமக்கள் குறைகேட்பு அலுவலக திறப்பு விழாவில், நபா தாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் வந்தபோது, அவரை வரவேற்க மக்கள் திரண்டனர். திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஒரு போலீஸ்காரர் ஓடுவதைப் பார்த்தோம். இதனையடுத்து அமைச்சரை விமானத்தில் ஏற்றி புவனேஸ்வருக்கு புறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.