PM Narendra Modi : நமது நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை அனைவரும் கொண்டாட வேண்டும் : பிரதமர் நரேந்திரமோடி

அரசின் இந்த முயற்சிகள் காரணமாக இந்தியா தற்போது உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டுத் தரவரிசையில் 46 வது இடத்தில் உள்ளது

தில்லி: Everyone should celebrate the achievements of our country’s scientists: மத்திய மாநில அறிவியல் மாநாட்டை அகமதாபாதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.கூடியிருந்தவரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த மாநாட்டின் ஏற்பாடு என்பது அனைவரின் முயற்சி என்பதற்குத் தெளிவான உதாரணம் என்பதை எடுத்துரைத்தார்.

“21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு எரிசக்தி போல அறிவியல் உள்ளது (Science is like energy for development). ஒவ்வொரு பிராந்தியம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் சக்தியை அது கொண்டிருக்கிறது. தற்போது நான்காவது தொழில் புரட்சியை நோக்கிய இந்தியா முன்னேறிவரும் நிலையில் இந்தத் துறையோடு தொடர்புடைய இந்திய அறிவியல் மற்றும் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில், நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் உள்ளவர்களின் பொறுப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தீர்வுகள், வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையாக அறிவியல் உள்ளது (Science is the basis of solutions, development and innovation). இந்த உத்வேகத்துடன் இன்றைய புதிய இந்தியா ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றுடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது. வரலாற்றிலிருந்து நாம் பாடங்களைக் கற்க வேண்டும். இது மத்திய மாநில அரசுகளுக்கு உதவும். கடந்த நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளை நாம் நினைவில் கொண்டால் இந்தக் காலத்தில் உலகம் எவ்வாறு பேரழிவு மற்றும் சோகத்தைக் கடந்து சென்றது என்பதை அறிய முடியும். ஆனால் இந்த சகாப்தத்தில் கிழக்கு அல்லது மேற்கு என எதுவாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் இருந்த விஞ்ஞானிகள் தங்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேற்கத்திய நாடுகளில் ஐன்ஸ்டீன், ஃபெர்மி, மாக்ஸ் பிளாங்க், நீல்ஸ் போர், டெல்சா போன்ற விஞ்ஞானிகள் தங்களின் பரிசோதனைகள் மூலம் உலகத்தை வியப்படையச் செய்தனர் (Scientists amazed the world with their experiments). இதே காலத்தில் சி வி ராமன், ஜெக்தீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், மேக்நாத் சாகா, எஸ் சந்திரசேகர் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை முன்னிலைக்குக் கொண்டுவந்தனர். கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையேயான வேறுபாட்டை கோடிட்டுக்காட்டிய பிரதமர், நமது விஞ்ஞானிகளின் பணிகளுக்குப் போதிய அங்கீகாரத்தை நாம் வழங்கவில்லை.

நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாடும் போது, நமது சமூகம் மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக அறிவியல் மாறுகிறது. நமது நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை அனைவரும் கொண்டாட வேண்டும். நமது விஞ்ஞானிகளைக் கொண்டாடுவதற்கு போதிய காரணங்கள் உள்ளன. அவர்கள் நாட்டுக்கு பல கண்டுபிடிப்புகளை தந்துள்ளனர். கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் (Finding a Corona vaccine) இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பையும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு பங்களிப்பு செய்ததை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

“2014க்குப் பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடு கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. அரசின் இந்த முயற்சிகள் காரணமாக இந்தியா தற்போது உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டுத் தரவரிசையில் 46 வது இடத்தில் உள்ளது (46th in the index Ranking). அதேசமயம் 2015 இல் இந்தியா 81 வது இடத்தில் இருந்தது” என்றார்.