Demonetisaton Upheld By Supreme Court: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியே: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisaton Upheld By Supreme Court) பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு நேரத்தில் அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். அதன் பின்னர் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பான பேச்சுக்கள் எழுந்தது. பல ஆயிரம் கருப்பு பணம் பதுக்கப்பட்டிருந்தது தடைப்படும் என்ற கருத்தையும் அப்போது பா.ஜ.க. சார்பில் பேசப்பட்டது. இது ஒரு புறம் இப்படி பேச எதிர்க்கட்சிகள் அனைத்தும் வேறு மாதிரியாக பேசியது.

இந்நிலையில், இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 57 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அனைத்து விதமான வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி ஒத்தி வைத்தது.

இந்நிலையில் பரபரப்பான இந்த வழக்கில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் இன்று (ஜனவரி 1) தீர்ப்பு வழங்கினர். அதன்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்புக்கு சிலர் எதிர்ப்புகளையும், சிலர் ஆதரவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.