Yuan Wang 5 spy ship : யுவான் வாங் – 5 சீன உளவு கப்பலால் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?

Thanks To WP>

புதுடில்லி: சீனாவின் உளவு கப்பல், இலங்கை துறைமுகத்திற்கு (Sri Lanka port) அடுத்த மாதம் செல்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நம் நாட்டின் கடலோர மாநிலங்களான தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை உளவு பார்ப்பதற்காக இந்தக் கப்பல் அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, எச்சரிக்கையாக இருக்கும்படி இந்த மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கவலை எழுந்துள்ளது.

நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் (Economic crisis) சிக்கியதையடுத்து அந்நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே அங்கிருந்து தப்பியோடியதையடுத்து, தற்போது புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இலங்கையில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அந்நாட்டின் தெற்கே உள்ள அம்பன்தோட்டாவில்,சீனாவின் உதவியுடன் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.

சீன ராணுவத்தின் ‘யுவான் வாங் – 5’ ( Yuan Wang – 5) என்ற உளவு போர்க் கப்பல், அம்பன்தோட்டாவுக்கு, ஆக.11ஆம் தேதி செல்கிறது என தகவல் வெளியாகிறது. ஆக., 17 வரை அங்கு முகாமிடும் அந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

யுவான் வாங் – 5 கப்பலின் இந்தப் பயணம் தொடர்பாக, ‘ரா’ எனப்படும் நம் நாட்டின் வெளிநாட்டு உளவு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. யுவான் வாங் – 5 கப்பலில் இருந்து, 750 கி.மீ பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தின் (Tamil Nadu)கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும் என கூறப்படுகிற‌து. இது தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. அந்த உளவு கப்பலின் வருகையால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கு இடமளிக்காமல் தேவையான பாதுகாப்புகளை செய்ய இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

யுவான் வாங் 5 கப்பல் குறித்த சில தகவல்கள்:

யுவான் வாங் 5 (Yuan Wang – 5) உளவு கப்பல் செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிப்பதற்கும் ஆதரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. யுவான்வாங் வகுப்பு என்பது ஒரே மாதிரியான வடிவமைப்பின் ஒற்றை வகுப்பு அல்ல, மாறாக, ஒரே தொடரின் கீழ் குழுவாக உள்ள வெவ்வேறு வடிவமைப்புகளின் குழு, ஒரே பெயரைப் பகிர்ந்து கொள்கிறது.

இந்தக் கப்பலுக்கும் விரிவான விவரக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை. யுவான்வாங் 5 முழுமையாக ஏற்றப்படும்போது சுமார் 21 ஆயிரம் (21 thousand tons) டன்களின் இடப்பெயர்ச்சிக்கு தகுதி கொண்டதாக இருக்கும். சுமார் 500 மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் சுமார் 190 மீட்டர் (620 அடி) நீளம் கொண்டதாகவும் அவற்றின் உந்துவிசை ஒரு சுல்சர் லிமிடெட் டீசல் எஞ்சினிலிருந்து, 20 நாட்ஸ்சிற்கும் மேற்பட்ட வேகம் கொண்டதாக உள்ளதாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த வகை கப்பல் முதலில் 1965 இல் பிரீமியர் சோ என்லாய் என்பவரால் முன்மொழியப்பட்டது, மேலும் இந்த யோசனை 1968 இல் மாவோ சேதுங்கால் தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த வகுப்பின் முதல் இரண்டு கப்பல்களான யுவான்வாங் 1 மற்றும் ( Yuan Wang – 2) ஆகியவை ஷாங்காயில் உள்ள ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு கடலுக்கு அனுப்பப்பட்டன.ஏவுகணைகளை ஏவுதல் மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் திறனை கொண்டது.

இரண்டு கப்பல்களின் முதல் ஆய்வுப் பணியானது மே 1980 இல் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் ஏவுதலைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட பின்னர், யுவான்வாங் 1 மற்றும் யுவான்வாங் 2 ஆகியவை 1986 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டன. இதன் பின்னர் யுவான்வாங் 2 விற்கு பிறகு யுவான்வாங் 3,4,5 (Yuan Wang – 3,4,5) ஆகியவை உருவாக்கப்பட்டன.