schools and colleges holiday : ஃபாசில் கொலை வழக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மங்களூரு: schools and colleges holiday today: பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணித் தலைவர் பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, நேற்று இரவு சூரத்கல்லில் மேலும் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டது கரையோர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 30 ஆம் தேதி இரவு முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை (Saturday 6 a.m) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, யாரும் தேவையில்லாமல் திரிய‌ வேண்டாம். இரவு 10 மணிக்கு மேல் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடினால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகர் காவல் ஆணையர் சசிகுமார் தெரிவித்தார். ஆணையர் அலுவலகத்தின் அருகே மட்டுமின்றி பல பகுதிகளில் மொத்தம் 19 சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் ஆணையர் சசிகுமார் தெரிவித்தார்.

தற்போது ஃபாசில் கொலை குறித்து மிக விரைவாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பான‌ வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் (No one should spread rumours) என்று ஆணையர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஃபாசில் கொலை வழக்கால், மங்களூரு மாநகரம், சூரத்கல், பஜ்பே, முல்கி, பனம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் பதற்றம் நிறைந்த பகுதியாக அறியப்பட்டு, சட்டம் – ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே இப்பகுதிகளி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சுரத்கல், பஜாபே, முல்கி, பனம்பூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (For schools and colleges) வெள்ளிக்கிழமை (ஜூலை 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களுக்கு முன்பு தென்கன்னட எல்லைப்பகுதியில் செவ்வாய்கிழமை இரவு 8:30 மணியளவில் பிரவீன் நெட்டாரு கோழிக்கடையை மூடிவிட்டு, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தப் இருந்தபோது, ​​மோட்டார் சைக்கிலில் வந்த மர்மநபர்கள் வீச்சரிவாளால் வெட்டி பிரவீனை நெட்டாருவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற‌னர்.

இதனால் ஏற்பட்ட பதட்டத்தால் அப்பகுதியின் அருகே உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது ஃபாசில் கொலை செய்யப்பட்டதால், தொடர்ந்து தென் கன்னட மாவட்டம் முழுவதும் பதட்டம் (Tension across South Kannada district) தொற்றிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற‌னர். இதனால் அவர்களின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் கரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. நிகழாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வந்த நிலையில், தென் கன்னட மாவட்டத்தில் தொடர்ந்து மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து நடைபெற்ற 2 கொலைகளால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் கன்னட மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் (Parents of students) செய்வதறியாது திகைத்து, கவலை அடைந்துள்ளனர்.