CENTRAL VISTA PROJECT : சென்டரல் விஸ்டா திட்டப்பணிகள் செப். 8 இல் பிரதமர் நரேந்திர மோடி திறப்பு

தில்லி: CENTRAL VISTA PROJECT will be Inauguration by Prime Minister Narendra Modi on Sep. 8th : சென்டரல் விஸ்டா திட்டப்பணிகள் முடிந்துள்ள நிலையில் செப். 8 ஆம் தேதி அதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

தில்லியில் விஜய் சௌக்கிலிருந்து இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை செப். 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார் என மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் இல்லங்கள் (Vice President and Prime Minister residences), மத்திய அமைச்சங்களின் செயலகம், ஆகியவற்றோடு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தையும் மொத்தம் ரூ. 13,450 கோடி செலவில் மத்திய நகர்புற வளர்ச்சித் துறை மேற்கொண்டது. கடந்த 20 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதையொட்டி செப். 8 ஆம் தேதி இதனை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க முடிவு செய்து, பிரதமரின் அலுவலகத்தின் பதிலுக்காக காத்திப்பதாக நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லி மையப்பகுதியில் உள்ள ராஜபாதை, மக்களையும், அரசையும் இணைக்கும் அடையாளமாகும். ராஜபாதையொட்டி உள்ள 3.90 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் (an area of 3.90 lakh sq. mtrs) சுற்றிலும் பசுமையான புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. அரசு தொடர்பான திறந்த வெளி நிகழ்ச்சிகள், குடியரசு தின அணி வகுப்பு, இங்கு பிரம்மிப்பூட்டும் வகையில் நடைபெற்றும், தற்போது மறுவடிவமைப்பு பெற்றுள்ளதால் முறையாக செப். 8 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டு, செப். 9ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனுதிக்கப்படுவார்கள் என்று நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2020 ஆம் ஆண்டு டிச. 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு (10th Dec 2020 The foundation stone was laid for this) தொடங்கப்பட்ட இந்த திட்டம், குடியரசு தலைவர் மாளிகை மற்றும் இந்தியா கேட் இடையே ராஜபாதையை புதுப்பித்து, வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளை பொது மக்கள் அணுகக்கூடிய அருங்காட்சியகங்களாக மாற்றுவதன் மூலம் அனைத்து அமைச்சகங்களுக்கும் புதிய பொது மத்திய செயலகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. , தற்போதைய கட்டிடத்திற்கு அருகில் ஒரு புதிய நாடாளுமன்ற கட்டிடம், எதிர்கால விரிவாக்கத்திற்கான கூடுதல் இருக்கை வசதி, புதிய குடியிருப்பு மற்றும் துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கான அலுவலகம் நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் அருகே உள்ளது மற்றும் சில பழைய கட்டமைப்புகளை அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளது.