Rahul Gandhi Padayatra : ராகுல்காந்தி பாதயாத்திரைக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

நாகர்கோவில்: Study on preparations for Rahul Gandhi Padayatra : கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல்காந்தி தலைமையிலான பாதயாத்திரைக்கான முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஞாயிற்றுக் கிழமை ஆய்வு மேற் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப். 7 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 3,750 கி.மீ பாத யாத்திரையை 150 நாள்களுக்கு மேற்கொள்ள உள்ளார். பாதயாத்திரை தொடக்க விழாவில் தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் பங்கேற்று (Chief Minister of Tamil Nadu. M. K. Stalin participating) ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடற்கரைப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிறகு ராகுல்காந்தி பாத யாத்திரையை தொடங்குகிறார். கன்னியாக்குமரி மாவட்டத்தில் செப். 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையும், அதனைத் தொடர்ந்து 11-ஆம் தேதி காலை திருவனந்தபுரம் வழியாக கேரள மாநிலத்திற்கு செல்கிறார் (Goes to Kerala state via Thiruvananthapuram). இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரைக்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பணிகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஏற்கெனவே ஆலோசனை செய்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலுக்கு வந்த அவர், பாதயாத்திரைக்கான பணிகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டார்.

பின்னர் பாதயாத்திரை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை (From Kanyakumari to Kaliakavilai) சாலையில் இருபுறமும் கட்சியினர் திரண்டு, நின்று ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற கே.எஸ். அழகிரி கேட்டுக் கொண்டார். ராகுல் காந்தி வரவேற்பு ஏற்பாடுகளை கண்காணிக்க 18 எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல்காந்தியும், நிர்வாகளும் தங்குவதற்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப் படுகின்றன.