Bye-election in Assembly Constituencies of 6 States: 6 மாநிலங்களில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு

புதுடெல்லி: Bye-election in Assembly Constituencies of 6 States. மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்திரபிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு பீகாரில் மோகமா, கோபால் கஞ்ச், ஹரியானாவில் ஆதம்பூர், தெலங்கானாவில் முனுகோட், உத்திரபிரதேசத்தில் கோலா கோக்ரநாத், ஒடிசாவில் தாம்நகர் (எஸ்சி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல், அக்டோபர் 7, 2022 அன்று தொடங்கி அக்டோபர் 14, 2022 அன்று நிறைவடைகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை அக்டோபர் 15, 2022 அன்று நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 17 ஆகும். வாக்குப்பதிவு நவம்பர் 3, அன்று நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நவம்பர் 6 அன்று மேற்கொள்ளப்படும்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வானொலி தொகுப்பு தொடக்கம்

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அகில இந்திய வானொலியுடன் இணைந்து வாக்காளர் நிலையம் என்ற வானொலி தொகுப்பை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர்ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் சந்திர பாண்டேயுடன் இணைந்து இன்று புதுதில்லியில் உள்ள ஆகாஷ்வானி நிலையத்தில் தொடங்கிவைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், பிரசார் பாரதி தலைமைத் தேர்தல் அதிகாரி, அகில இந்திய விழிப்புணர்வு வானொலி செய்திப் பிரிவு தலைமை இயக்குநர், தேர்தல் ஆணையத்தின் தூதர் நடிகர் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 52 வாரங்கள் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது. அகில இந்திய வானொலியின் விவித் பாரதி, எஃப்எம் ரெயின்போ, எஃப்எம் கோல்டு மற்றும் முதன்மை அலைவரிசைகளில் 15 நிமிடங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்நிகழ்ச்சி ஒலிப்பரப்பாக உள்ளது. அகில இந்திய வானொலியின் 230 அலைவரிசைகளில் 23 மொழிகளில் இது ஒலிபரப்பப்பட உள்ளது.

வாக்காளர் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் முதலாவது பகுதி அக்டோபர் 7,2022 அன்று ஒலிபரப்பாக உள்ளது. வாக்காளர் பதிவு என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சி, இரவு 7.25-க்கு ஒலிப்பரப்பாகும்.