Budget made with 7 key features: 7 முக்கிய அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: Union Finance Minister Nirmala Sitharaman is presenting the budget in Parliament today at 11 am. நாடாளுமன்றத்தில் இன்று 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில், ”கடந்த பட்ஜெட்டுகள் அமைக்கப்பட்ட அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இந்த பட்ஜெட் அமையும். இதர பிற்படுத்தப்பட்டோர் பழங்குடிகள் தலித்துகள் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இது இருக்கும். நம்பிக்கையின் மீது கட்டி எழுப்பப்படும் பட்ஜெட்டாக இது விளங்கும்.

75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. கொரோனா காலத்தில் யார் ஒருவரும் பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.

ஜி20 நாடுகளின் மாநாட்டில் தலைமையை இந்தியா ஏற்று இருப்பது மிகப்பெரிய தனித்துவமான வாய்ப்பு. தனிநபர் வருமானம் கடந்த 9 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பதாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிக வளர்ச்சி கண்டுள்ளது. 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 11.4 கோடி விவசாயிகளுக்கு அவர்களது கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 7% ஆக உயரும் இது மற்ற நாடுகளை விட மிக அதிகம். பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இந்திய பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்கிறது. நல்ல எதிர்காலம் நமக்கு உள்ளது. விவசாயத் துறையில் புதிய ஸ்டார்ட் அப்புகள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்.

ஏழு முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன :
1) உள்ளடக்கிய வளர்ச்சி
2) கடைசி மைல் அடைதல்
3) உள்கட்டமைப்பு முதலீடு,
4) திறனை அதிகரித்தல்
5 ) பசுமை வளர்ச்சி,
6) இளைஞர்கள்
7 ) நிதித் துறை
உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்தார்.