Union Budget 2023: பிரதமர் வீட்டுவசதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: Nirmala Sitharaman said that the allocation of funds for the Prime Minister’s Housing Scheme will be increased by 66 percent. பிரதமர் வீட்டுவசதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிரதமர் வீட்டுவசதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படும். மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தனியார் முதலீடுகள் அனைத்து துறைகளிலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ரயில்வே துறை மேம்பாட்டிற்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. நகர்ப்புற வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்படும் .
வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்திற்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கம். 42 புதிய சட்டங்கள் அறிமுகம் . மூலதன முதலீடுகளுக்கான ரூ.10 லட்சம் கோடி வரை 33 சதவீதம் அதிகரிப்பு
தேசிய தரவுகள் நிர்வாகக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்
அதிகாரப்பூர்வமற்றத் தரவுகளை கண்டறிய இந்தக் கொள்கை வகை செய்யும்
வாடிக்கையாளரை அடையாளம் காணும் நடைமுறை KYC எளிமைப்படுத்தப்படும்.
3 செயற்கை நுண்ணறிவு செயல்திறன் மையங்கள் ஏற்படுத்தப்படும்.
740 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை ஏற்படுத்தப்படும்.
அரசு முகமைகளில் அனைத்து டிஜிட்டல் நடைமுறைகளில் பான் அட்டை பொதுவான அடையாளமாக ஏற்கப்படும்.
மின்சார பரிமாற்றத் துறைக்கு ரூ.35,000 கோடி நிதிஒதுக்கீடு
கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் 500 புதிய திட்டங்களுக்கு அனுமதி
10,000 உயிரி உள்ளீடு மையங்கள் ஏற்படுத்தப்படும்
கடலோரத்தில் உப்புத்தன்மை வாய்ந்த பகுதிகளில் அலையாத்தி காடுகளை மிஸ்டி என்ற பெயரில் வளர்க்க திட்டம்
பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை மாற்றுவதற்கு மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம்
புதிய பழகுநர் திட்டத்தின்கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி
எல்லையோர கிராமங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும்
மாநில தலைநகர்களிலும் முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் ஒருங்கிணைந்த வணிக வளாக மையங்கள் ஏற்படுத்தப்படும்.