Mamata banerjee: பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது- மம்தா பானர்ஜி விமர்சனம்

mamata
பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது

Mamata-banerjee: மத்தியில் ஆளும் பாஜக அரசை மிகக்கடுமையாக எதிர்த்து வருபவர் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி. மோடி அரசு மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருவதாக தொடர்ந்து விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சியை விட பாஜக ஆட்சி மோசமானது என மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மம்தா பானர்ஜி கூறுகையில், ” “மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. பாஜக தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து வருகிறது.

ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆட்சியைக் காட்டிலும் பாஜக-வின் ஆட்சி மோசமானது. விசாரணை அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இன்றி விசாரணை முகமைகள் செயல்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: Caught On Camera: பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்