Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயிலை தகர்த்து மீண்டும் மசூதி கட்டப்படும்: அல்கொய்தா எச்சரிக்கை

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு (Ayodhya Ram Temple) கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதற்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வருகின்ற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் கோயில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமான பணிகளுக்கு சுமார் ரூ.1,800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அல்-கொய்தா அமைப்பு சார்பில் வெளிவர கூடிய கஜ்வா-இ-ஹிந்த் என்ற பத்திரிகையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை தகர்த்து அங்கு மீண்டும் மசூதி கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு இந்திய முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அச்செய்தியில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.