Prime Minister’s birthday : பிரதமரின் பிறந்தநாளில் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வர உள்ளன‌

Prime Minister Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகளை விட உள்ளார்.

புதுதில்லி: 8 leopards are coming as special guests to India on Prime Minister’s birthday : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வருகின்றன. கண்டங்களுக்கு இடையேயான இடமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சிறுத்தைகள் கொண்டு வரப்படுகின்றன. சிறுத்தைகள் செப்டம்பர் 17 ஆம் தேதி நமீபியாவின் தலைநகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்படுகின்றன‌. பின்னர் பி 747 ஜம்போ ஜெட் விமானம் மூலம் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்படும்.இதற்கு சிறப்பு விமானம் ஏற்கனவே நமீபியா தலைநகர் சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தனது பிறந்தநாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகளை விட உள்ளார். நமீபியாவில் இருந்து சிறுத்தைகளை கொண்டு வர சிறப்பு விமானம் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. சிறுத்தைகளின் எடையை சரி பார்க்கவும், பறக்கும் போது அவை பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு ஒரு சிறப்பு கூண்டு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த விமானம் 16 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்டது. எரிபொருள் நிரப்ப எங்கும் நிற்காமல் நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு (From Namibia to India) நேரடியாக பறக்க முடியும். விமானத்தின் வெளிப்புறத்தில் புலியின் படம் வரையப்பட்டுள்ளது. விமான பயணத்தின் போது சிறுத்தைகள் நலம் கண்காணிக்க‌ சிறப்பு குழு ஒன்று அனுபப்பட்டுள்ளது. சிறுத்தைகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சிறுத்தைகள் இந்தியா வரும் வரை உணவு வழங்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வனத்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

1948 ஆம் ஆண்டு, சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் உள்ள சால் காட்டில் ஒரு புள்ளி சிறுத்தை இறந்தது (A spotted leopard died in Sal forest in Chhattisgarh’s Koria district). அப்போதைய நாட்டின் வரலாற்று நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக கூறப்பட்டது. இப்போது சிறுத்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய அரசு நமீபியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு விலங்குகளை கொண்டு வந்துள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள பூங்காக்களில் பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன.