Jodhpur Suryanagari Express Train Derail: ராஜஸ்தான்: சூரியநகரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

பாலி: ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி (Jodhpur Suryanagari Express Train Derail) எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலில் 8 பெட்டிகள் இன்று அதிகாலை நேரத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிகாலையில் 3.27 மணியளவில் ஜோத்பூர் அருகே ராஜ்கியவாஸ்போமத்ரா பிரிவு இடையில் ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடனடியாக பயணிகளை மாற்று ரயில் மூலம் அழைத்து வருவதற்காக நிவாரண ரயில் அனுப்பப்பட்டுள்ளதாக வடமேற்கு ரயில் கூறியுள்ளது. இந்த விபத்து பற்றி தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கூறும்போது, உயர் அதிகாரிகள் விரைவில் சம்பவ இடத்திற்கு வருவார்கள். மேலும், ரயில்வே பொதுமேலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஜெய்ப்பூரில் உள்ள தலைமையகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ரயிலில் பயணம் செய்த குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொள்வதற்காக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜோத்பூருக்கு: 02912654979, 02912654993, 02912624125, 02912431646 பாலி மார்வாருக்கு: 02932250324 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.