4% increase in Dearness Allowance for govt employees: அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: Central government approves 4 percent increase in Dearness Allowance for government employees. அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 01.07.2022 முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

நடப்பாண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணின் 12 மாத சராசரியில் அதிகரித்த சதவீதத்தின் அடிப்படையில் 01.07.2022 முதல் நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு தொகையை 01.07.2022 முதல் கணக்கிட்டு பெறுவார்கள்.

அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,591.36 கோடி கூடுதல் நிதி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.4,394.24 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிவாரண அதிகரிப்பு காரணமாக ஆண்டுக்கு ரூ.6,261.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.4,174.12 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் என இரண்டுக்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.12,852.56 கோடி செலவாகும். 2022-23 நிதியாண்டில் ரூ.8,568.36 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும்.

டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் ரூ.10,000 கோடி முதலீட்டை உள்ளடக்கியது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கூறினார்.

மேலும், பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனதா திட்டத்தின் கொரோனா காலத்தில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அந்த நடைமுறை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.