19 MPs suspended in Rajya Sabha : மாநிலங்களவையில் திமுக உள்பட 19 எம்.பி.க்கள் இடை நீக்கம்

Image credit: Twitter.

தில்லி: 19 MPs including DMK suspended in Rajya Sabha : மாநிலங்களவையில் திமுக உள்பட 19 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையை செவ்வாய்கிழமை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக திமுக உறுப்பினர்கள் (DMK members) 6 பேர் உள்பட 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

திமுக கட்சியைச்(DMK party) சேர்ந்த‌

எம்.எம்.அப்துல்லா,
எஸ்.கல்யாண சுந்தரம்,
ஆர்.கிரிராஜன்,
என்.ஆர்.இளங்கோ,
எம்.சண்முகம்,
கனிமொழி என்.வி.என்.சோமு,

திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) கட்சியைச் சேர்ந்த

சுஷ்மிதா தேவ்,
மௌசம் நூர்,
நதிமுல் ஹக்
சாந்தா சேட்ரி,
டோலாசென்
சான்டனு சென்
அபி ரஞ்சன் பிஷ்வர்

டிஆர்.எஸ் கட்சியைச் (TRS party) சேர்ந்த‌

லிங்கையா யாதவ்,
ரவிஹாந்தரா வத்திராஜு,
தாமோதர் ராவ்

இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சியைச் சேர்ந்த‌

பி.சந்தோஷ்குமார்,

மார்க்சிஸ்ட் (CPI) கம்யூனிஸ்ட்

வி.சிவதாசன்
ஏ.ஏ. ரஹீம்,

ஆகிய 19 பேரையும் இந்த வாரம் முழுவதும் (Full of this week) மாநிலங்களவை அலுவல்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவையின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக‌ அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் (Jyothimani, Manickam Thakur) உ ள்பட 4 பேர் திங்கள்கிழமை இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தொடங்கியது. விலை உயர்வு ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இரு அவைகளிலும் (both Houses) அமளியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுள்ளதால், இரு அவைகளும் நடத்த முடியாமல் முடங்கியுள்ளன. இதனையடுத்து கடந்த 2 நாள்களாக அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கேட்கப்படும் எந்த கேள்விகளுக்கும் ஆளும் கட்சி சார்பில் உரிய பதில் அளிப்பதில்லை. இதனைக் கேட்டால் அவையிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளனர். இந்த அரசு எதிர்க்கட்சிகளின் (opposition parties) உரிமைகளை பரிப்பதிலேயே குறியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் எதற்காக குரல் எழுப்பினாலும். அதனை ஆளும் கட்சி அமைச்சர்கள் சட்டை செய்வதில்லை.

எங்களை மக்கள் இங்கு தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளதே அவர்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காகத்தானே ஒழிய, ஆளும் கட்சியினர் செய்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவதற்கு அல்ல. அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் எதிர்க்கட்சியினர் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். என்றாலும். மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் போது வாய் மூடிக் கொண்டிருக்க முடியாது. ஆளும் கட்சியினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை (No faith in democracy) என்று இடை நீக்கம் செய்யப்பட உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய அவையை நடத்தமுடியாமல் செய்வதில் ஆளும் கட்சியினர் குறியாக உள்ளனர். இது போன்ற ஒழுங்கு நடவடிக்கை (Disciplinary action) மேற்கொண்டால் ஒழிய, எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாது. எனவேதான் இரு அவைகளின் மாண்புகளை காக்க இது போன்ற நடவடிக்கை அவசியம் தேவை என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.