Trains running late:பனிமூட்டம் காரணமாக 17 ரயில்கள் தாமதம்

புதுடெல்லி: 17 trains running late in northern region due to fog பனிமூட்டம் காரணமாக வடக்கு பகுதியில் 17 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்குப் பகுதிகளில் குறைந்த தெரிவுநிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக 17 பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே அதிகாரிகளின் அறிக்கைபடி, விசாகப்பட்டினம்- புது டெல்லி ஆந்திரா எக்ஸ்பிரஸ், மைசூரு- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ராணி கம்லாபதி-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஷான் இ போபால் எக்ஸ்பிரஸ் 01:00 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.

பிரதாப்கர்-டெல்லி பத்மாவத் எக்ஸ்பிரஸ், பனாரஸ்-புது டெல்லி காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் 02:00 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.

டெல்லி பிரம்மபுத்ரா மெயில், டாக்டர் அம்தேத்கர் நகர்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா மால்வா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், துர்க்- ஹஸ்ரத் நிஜாமுதீன் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் 02:30 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாம்தீன் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் மற்றும் புசாவல்-ஹஸ்ரத் நிஜாமுதீன் கோண்ட்வானா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்படுகின்றன.

முன்னதாக செவ்வாய்க்கிழமை, வடக்கு பகுதியில் பனிமூட்டம் காரணமாக 10 ரயில்கள் தாமதமாக வந்தன.