surya 42 movie update: சூர்யா 42 படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு

சென்னை: A major update on actor Surya’s next film Surya 42 is out. நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 42 குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் நடிப்புத் திறமையால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யா, திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் இணைந்து ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை 10 மொழிகளிலும், 3டியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 9, 2022 அன்று வெளியிடப்பட்டது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த சூர்யா 42 எதை சார்ந்து இருக்கப்போகிறது என்றால், இது வலிமை மிக்க ஒரு சரித்திர படமாகத்தான் இருக்கும். படத்தின் ப்ரீ புரெடெக்‌ஷன் வேலைகள் வரும் மார்ச்சில் துவங்கப்படுகிறது. இதற்குமுன் 7ம் அறிவில் போதி தர்மராக நடித்து வரவேற்பை பெற்ற நிலையில், அதேபோல், இந்த படத்தில் ஒரு வாரியராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் முக்கிய அப்டேட்டுகள் வெளியானதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.