Drug shortage in Jipmer Hospital: ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

புதுச்சேரி: Ramadoss has appealed to the central government to take steps to alleviate the shortage of medicines in Puducherry Jipmer Hospital : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research) சுருக்கமாக என்றழைக்கப்பட்டும் ஜிப்மர் (JIPMER) மருத்துவமனை புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம் மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 8,000-க்கும் அதிகமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் (PUDUCHERRY JIPMER HOSPITAL ) பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஜிப்மர் தான் உயிர்காக்கும் மருத்துவமனையாக திகழ்கிறது. அங்கு மருத்துவத்திற்காக வரும் அனைவருக்கும் அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவதை ஜிப்மர் நிர்வாகமும், அரசும் உறுதி செய்ய வேண்டும். ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளாகவே மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மருத்துவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் (Anbumani Ramadoss) மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, அதற்கு தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தான் மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும். புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாடு லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும். ஏழைகளுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய ஜிப்மருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அங்கு நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ அவர் தெரிவித்துள்ளார்.