Corona vaccination special camp: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 12.62 லட்சம் பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி

சென்னை: Corona vaccination for 12.62 lakh people in Tamil Nadu : தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 12.62 லட்சம் பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 9.02 லட்சம் பேருக்கு இலவச பூஸ்டர் செலுத்தப்பட்டது.

தேசிய அளவில் கரோனா தொற்று அதிக அளவில் பரவியதையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜன. 16 ஆம் தேதி முதல் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தடுப்பூசிகள் செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 11) 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ( special camp held at 50 thousand places)12.62 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 9.02 லட்சம் பேருக்கு இலவச பூஸ்டர் செலுத்தப்பட்டது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு, 6 மாதம் நிறைவந்தவர்களுகு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் அல்லது 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று 50 ஆயிரம் இடங்களில் 36 வது தடுப்பூசி முகாம் (36th Vaccination Camp) நடைபெற்றது. இதில் 12 வயதிற்கும் மேற்பட்ட பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சுமார் 12,62,089 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது (12,62,089 lakh people were given corona vaccine). அதில் முதல்தவணையாக 61,202 பேருக்கும், இரண்டாவது தவணையாக 2,98,634 பேர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசி 9,02,253 பேர்களுக்கும் செலுத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 18 வயது மேற்பட்டவர்களுகு 96.49 சதமும், முதல் தவணையாக 91.09 சதம் பேருக்கு இரண்டாவது தவணையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக‌ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.