சிங்கப்பூர்: Antibiotic Antimicrobial drugs should be used responsibly: Tamil Nadu Minister M. Subramanian : நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகளைத் தடுக்க சர்வதேச அளவில் வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சுகாதார மாநாட்டில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமண்யன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள அவர், அங்கு நடைபெறும் 7 ஆவது உலக சுகாதார மாநாட்டில் (In 7th World Health Congress) அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். மாநாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்பு பாதை தென்கிழக்கு ஆசியாவில் தொற்று நோய்கள் அச்சுறுத்தல்கள் எனும் தலைப்பில் அவர் பேசியதாவது: உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டு மொத்த மனிதகுலமும் கரோனா பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
தற்போதுள்ள போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள் பரவுவதை தவிர்க்க இயலாத நிலை உள்ளது. இதற்காக பிராந்திய தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் கூடிய ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். ஜினோசிஸ் என்பது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோயாகும். ஜினோடிக் நோய் கிருமிகள் (Genotic disease germs) பாக்டீரியா வைரஸ் அல்லது ஒட்டுண்ணியாக இருக்கலாம். அல்லது வழக்கத்திற்கு மாறான காரணிகள் உள்ளடக்கி இருக்கலாம்.
அனைத்து தொற்று நோய்களிலும், ஏற்கெனவே உள்ள பல நோய்களிலும் பெரும் சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. புதிய நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் பயோடிக் மருந்துகளின் விலை அதிகமாகவும், பெரும்பாலான மக்களால் வாங்க முடியாதவையாகவும் உள்ளன. உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார நிறுவனங்களில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் பல மருந்து எதிர்ப்பு உருமாற்ற நுண்ணுயிரிகள் வெளிப்படுவது தடுக்கப்பட வேண்டும் (Emergence of drug-resistant mutants should be prevented). இதற்கு சிறந்த புரிதல், கூடுதல் ஆராய்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு கண்காணிப்பு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மைக்கான பயிற்சி, ஆராய்ச்சி மற் றும் நிதியுதவி ஆகியவற்றில் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஆன்ட்டிபயோடிக் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பொறுப்புடன் பயன்படுத்துவது மட்டுமே எதிர்கால சந்ததியினர் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பலனை அனுபவிக்க உதவும் என்றார்.