Minister K. Sudhakar : அரசை வஞ்சித்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் கே.சுதாகர்

பெங்களூரு: Action against hospitals that defrauded the governmen t: கரோனா தொற்றிற்கு சிகிச்சை அளித்து, நோயாளிகளிடமும் பணம் வசூலித்து, அரசிடம் கரோனா சிகிச்சைக்கான நிதியை பெற்ற மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் கரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டதையடுத்து அரசு சார்பில் அவர்களுக்கு ஆயுஷ்மன் பாரத் கர்நாடக திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சில மருத்துவமனைகள் க‌ரோனா தொற்றிற்கு சிகிச்சை அளித்து, நோயாளிகளிடமும் பணம் வசூலித்து, அரசிடம் கரோனா சிகிச்சைக்கான நிதியை பெற்றுள்ளன. இதை போன்று அரசை வஞ்சித்த‌ 577 மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டு (577 hospitals have been identified), நடவடிக்கை எடுப்பது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 403 நோயாளிகளின் குடும்பங்களுக்கு ரூ. 1,58,22,359 ரொக்கப்பணம் மருத்துவமனைகளிடமிருந்து, வாங்கி, திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

சில மருத்துவமனைகளின் மீதான புகார்களை மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கான நிதியை மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 376.26 கோடி நிதி கரோனா சிகிச்சைக்காக செலவிடப்பட்டுள்ளது. 2022 ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ரூ. 11.80 கோடி நிதி கரோனா சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது (11.80 crore has been provided for Corona treatment) என்றார்.

தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிதி ஒதுக்கித் தந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு சில மருத்துவமனைகள் நோயாளிகளிடமும் பணம் வசூலித்ததோடு, அரசின் நிதியை பெற்று மோசடியில் ஈடுபட்டன (They took government funds and engaged in fraud). இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக 577 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அரசை வஞ்சித்த மேலும் சில மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.