Arumugasamy Commission will submit its report: ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யும் ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: The Arumugasamy Commission will submit its report in a day or two: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வந்தது.

இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் படியே அனைத்தும் சிகிச்சைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்து டிசம்பர் 5 ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எனவே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்டுப்படுத்த முடியாத அளவிலான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும், பாக்டீரியா ரத்தத்தில் பரவி இருந்ததும், இது போல உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தங்களது இறுதி அறிக்கையை 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஓரிரு நாளில் தாக்கல் அரசிடம் செய்ய உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதனிடையே சுமார் 5 ஆண்டுகளுக்குப்பின் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.