Chennai University Admission Extended: சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: University of Chennai has extended the application period: சென்னை பல்கலைக்கழகம் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்குக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீடித்துள்ளது.

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதமாக வெளியிட்டதால், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை ஒத்திவைத்து யு.ஜி.சி. உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 22-ந்தேதி சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள்வெளியானது. இதனையடுத்து கல்லூரி சேர்க்கை 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி 27-ந் தேதி வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில், 27-ந் தேதி மாலையுடன் அவகாசம் முடிவடைந்தது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் மாணவர்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின் படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஜூலை 22ஆம் தேதி வெளியானது.

இதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் ஐந்து நாள்கள் நீட்டித்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூலை 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில், கடந்தாண்டை காட்டிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ளனர்.

இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பப்பித்துள்ளனர். எனவே, மாணவர்கள் மத்தியில் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால் சென்னை பல்கலைக்கழகம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.