Rain Holiday: சிக்கமகளூர் மாவட்டத்தில் பலத்த மழை வெள்ளிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை

Rain holiday: Heavy rain in Chikkamagaluru district; schools to remain closed on Friday
Image credit to original source


Rain Holiday: சிக்கமகளூர் மாவட்டத்தில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது மழைக்கு சிக்கமகளூர் என் ஆர் புரா கொப்பா சிருங்கேரி கலசா மூடிகெரெ உட்பட்ட தாலுகாக்களில் சிசுபாலனா அங்கனவாடி மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து இருந்தது மாவட்ட நிர்வாகம்

இந்த நிலையில் இரண்டு நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து தூங்கா பத்ரா ஹேமாவதி ஆறுகளில் மழை வெள்ளம் அதிகரித்து ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது கெரகட்டே என்னும் பகுதியில் பெரிய மரம் ஒன்று விழுந்து சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Rain holiday: Heavy rain in Chikkamagaluru district; schools to remain closed on Friday
Image credit to original source

சிக்கமகளூர் மாவட்டம் சிருங்கேரி சாரதம்மன் கோவில் அருகே காந்திபூங்காவில் ஆற்று வெள்ளம் அதிகரித்து போவதால் யாரும் உள்ளே இறங்க கூடாது என போலீசார் தடுப்பு கம்பியை வைத்து தடுத்துள்ளனர் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தால்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் எனவும் மற்றும் அத்யா அவசியம் இன்றி ஆற்றுக்குள் இறங்க கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது

வெள்ள அபாயம் உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பு படையினர் மற்றும் என்டிஆர்எப் படையினர் அனைவரும் தயாராக இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது கடந்த மாதம் பெய்த மழைக்கு இதுவரை 2000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்த நிலையில் மீண்டும் தற்பொழுது பல இடங்களில் மின்கம்பங்களும் விழுந்துள்ளன மரங்களும் விழுந்துள்ளது