Chikkamagaluru: பத்து நாட்களாக காணாமல் போன வன காவலாலி சாவு

Chikkamagaluru: Forest guard who was missing for ten days dies
Image credit to original source

Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுகா சக்கரையப்பட்டினா நீலகிரி தொப்பில் காவல் பணிக்கு சென்ற குடகு மாவட்டத்தை சேர்நத் சரத் 33 வயது என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை

பின்னர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் குடும்பத்தார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனவரை கடந்த ஐந்து நாட்களாக தீவிரமாக டிரோன் கேமரா மற்றும் பல்வேறு கேமராக்கள் வைத்து தேடி வந்த நிலையில் ஏதேனும் வனவிலங்குகள் கொன்றனவா என சந்தேகமான நிலையில் தேடினர்

நீலகிரி தோப்பில் ஒரு பகுதியில் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தார் எப்படி அவர் இறந்தார் நிர்வாணமானார் யாரேனும் அடித்து கொன்றார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சந்தன மரம் வெட்ட வந்தவர்கள் யாரேனும் அடித்துக் கொண்றார்களா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில்

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு சக்கராயப்பட்டினா போலீசார் மற்றும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்