Pondicherry University DDE Last Date: பாண்டிச்சேரி பல்கலை., தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

புதுச்சேரி: The Directorate of Distance Education of Pondicherry University announces that last date for online applications is for UG and PG courses is 15th November 2022. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தால் (DDE) மொத்தம் 20 பட்டப்படிப்புகள் வழங்கபட்டு வருகிறது, இதில் 08 MBA மேலாண்மை பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றில் சந்தைப்படுத்தல் (Marketing), நிதி (Finance), மனித வள மேலாண்மை (Human Resource Management),சர்வதேச வணிகம் (International Business), பொது (General), சுற்றுலா(Tourism), செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி (Operations & Supply Chain Management) , மேலாண்மை மற்றும் மருத்துவமனை மேலாண்மை (Hospital Management) ஆகியவை அடங்கும். 04 முதுகலைபட்டப்படிப்புகள் உள்ளன. அவை MA – ஆங்கிலம் (English), ஹிந்தி (Hindi), சமூகவியல் (Sociology) மற்றும் MCom (Finance). (BBA, BCom, BA – ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பத்திரிகை & வெகுஜன தொடர்பு) என 08 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த பட்டப்படிப்புகள் AICTE, புதுதில்லி மற்றும் தொலைதூரக் கல்விப் பணியகம் (DEB), புதுதில்லி ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பொதுவாகக் கல்வியாண்டிற்கான சேர்க்கை செயல்முறை ஜூலையில் தொடங்கும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு தாமதமாகும், மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான கடைசித் தேதி நவம்பர் 15, 2022 ஆகும்.

ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். ஏதேனும் விளக்கங்களுக்கு, எங்கள் உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.