JEE Exam: ஜேஇஇ நுழைவுத்தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண் விலக்கு: அன்புமணி வரவேற்பு

சென்னை: Anbumani welcomed the exemption from mentioning 10th class marks in the JEE entrance application. ஜேஇஇ நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது அன்புமணி வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வௌியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது.
Also Read: Extra Buses Running Today: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் தமிழக மாணவர்களால் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த சிக்கல் குறித்து நான் தான் தமிழக அரசின் கவனத்திற்கும் தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இதை சுட்டிக்காட்டி தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.

Also Read: Corona Test: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

அதையேற்று தமிழ்நாடு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.