Admission will be based on CUET score: ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் ‘க்யூட்’ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

சென்னை: Admission will be based on Common University Entrance Test (CUET) score : RGNIYD Director. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் அனைத்துப் படிப்புகளுக்கான சேர்க்கை க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைகள் நடைபெறும்.

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (Rajiv Gandhi National Institute of Youth Development, RGNIYD), இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இளைஞர் மேம்பாட்டிற்கான பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுத் திட்டங்களையும் நல்குகின்றது. மாநில முகமைகளுக்கும் இளைஞர் அமைப்புகளுக்கும் பயிற்சி திட்டங்களையும் ஒருங்கிணைக்கின்றது. நாடு முழுவதும் விரிவாக்கப் பணிகளிலும் பரப்புரை முயற்சிகளிலும் பங்கேற்கின்றது.

நாட்டின் இளைஞர் தொடர்பான நடவடிக்கைகளுக்கான முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது. நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவ கேந்திர சங்காதன் மற்றும் பிற இளைஞர் அமைப்புகளுடன் பயிற்சி திட்டங்களை வகுப்பதில் பங்கேற்கின்றது. ஊரக, நகரிய மற்றும் பழங்குடி பகுதிகளில் இளைஞர் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் பயிற்சிகளுக்கு மைய முகமையாகவும் உள்ளது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஷிப்நாத் தேப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்க்கைக்காக க்யூட் (பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதிய மாணவர்கள் எங்களுடைய வலைதளமான (www.rgniyd.gov.in) –ல் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மாணவர்கள் க்யூட் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், மத்திய அரசின் இது இடஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் நிலையில், கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய 6 படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (டேட்டா சயின்ஸ்), எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (சைபர் செக்யூரிட்டி), எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், (ஆர்ட்டிஃப்ஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மிஷின் லேனிங்), எம்எஸ்சி கணிதம், எம்ஏ ஆங்கிலம் மற்றும் எம்ஏ சமூகவியல் போன்ற புதிய படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் குழந்தைகள் உரிமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக முதுநிலை கல்வியை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து இயக்குனர் விரிவாக விளக்கினார்.