Admission Extened in Govt ITI: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

தர்மபுரி: Admission Extened in Govt ITI: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டு சேர்க்கைக்கு தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிட விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்ச வரம்பு இல்லை.
கல்வித்தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு: கம்பியாள் (Wireman) (2வருடம்) பற்றவைப்பவர் (Welder) (1வருடம்)
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), கட்டடபட வரைவாளர் (2வருடம்), மின்பணியாளர் (2வருடம்) பொருத்துநர் (2வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம்), கம்மியர் டீசல் என்ஜின் (1வருடம்) கடைசலர் (2வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 2021ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்படி பதிவேற்றம் செய்யலாம்.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்கள் இதனை ஒரு வாய்ப்பாக கருதி 25.08.2022 -க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கீழ்க்காணும் விண்ணப்பதாரர்கள்கலந்தாய்வுக்கு இக்கலந்தாய்வில் உட்படுத்தப்படுவார்கள்.

  1. 1.புதிதாக விண்ணப்பிப்போர் 2. முதற்கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இரு சுற்றுகளிலும் கலந்து கொண்டு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்கள். 3. முதற்கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யதாவர்கள்.
    வ.எண்.2 மற்றும் 3 இல் குறிப்பிட்ட விண்ணப்பதாரர்கள் புதிதாக விண்ணப்பம் செய்ய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
    பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கும் விடுதி விரைவில் துவங்கப்படவுள்ளது.
    சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்பகட்டணங்களுடன் நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    விண்ணப்ப கட்டணம் ரூ.50/- சேர்க்கை கட்டணம் ரூ.185/195
    மேலும் விபரங்களுக்கு முதல்வர் அரசினர் தொழிற் பயிற்சிநிலையம், தருமபுரி தொலைபேசி எண். 9688675686, 8883116095 9688237443 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    இவ்வாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் (பொ) டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.