voter list, Aadhaar number link : தமிழகத்தில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண் இணைப்பு

சென்னை: 37.81 lakh people in Tamil Nadu with voter list, Aadhaar number link : தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இதுவரை 37.81 லட்சம் பேர் இணைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகட்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆக. 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை 37.81 லட்சம் பேர் இணைத்துள்ளனர் (So far 37.81 lakh people have connected). இது மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் 6.08 சதமாகும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல்துறை ஆலோசனை நடத்தியது(The State Election Department held a consultation). இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வாக்காளர்கள் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஆக. 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுவீடாக சென்று மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் தங்களது செல்லிடப்பேசியில் கருடா என்ற செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்த செயலி மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதியை வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

தமிழகம் முழுவதும் கடந்த 17 ஆம் தேதி வரை வாக்காளர்கள் பட்டியலுடன் ஆதார் எண்ணை 37,81,498 பேர் இணைத்துள்ளனர். இது மொத்த வாக்காளருடன் ஒப்பிடுகையில், 6.08 சதமாகும்(As compared to the total electorate, it is 6.08 percent). 90 சதம் பேர் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொண்டுள்ளனர். 10 சதம் பேர் என்விஎஸ்பி எனப்படும் தேசிய வாக்காளர் சேவைக்கான இணையதளம் மற்றும் வாக்காளர் சேவைக்கான கைப்பேசி செயலி ஆகியவற்றை பயன்படுத்து வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த பணியை மேற்கொள்வதில் பல்வேற் மாவட்ட நிர்வாகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. சுமார் 20 சதத்திற்கும் கூடுதலாக வாக்காளர் எண்ணை அரியலூர், பெரம்பலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன.

கடந்த 17 நாட்களில் மட்டும் 6.08 சதம் அளவிற்கு வாக்காளர்கள் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது நல்ல சாதகமான அம்சம். வாக்காளர்கள் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது(The deadline is March 31). எனவே இந்த கால அவகாசத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் நவ. 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த பணிகள் 9 மாதங்கள் நடைபெறும். இந்த கால கட்டத்தில் அதிக அளவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.