Rummy game: ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை
ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை

Rummy game: ஆன்லைன் ரம்மியால் கிடைக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு அறியாமையில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து கடனுக்கு மேல் கடன் வாங்கி கடனில் மூழ்கி வேறு வழியின்றி தற்கொலை முடிவை தேர்வு செய்யும் நிலையும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை போருரில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் பணம் இழந்த தனியார் நிறுவன முன்னாள் ஊழியர் பிரபு (39), வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். போரூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்த அவர், ஓராண்டாக வேலை இல்லாமல் இருந்தநிலையில் மது பழக்கத்தால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

தற்போது இளைஞரின் உடலை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒடிசாவில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.