ஒடிசாவில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.

ஒடிசாவில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.
ஒடிசாவில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.

Odisha BJD MLA: ஒடிசாவில் 10ம் வகுப்பு மாநில வாரிய தேர்வு நேற்று நடந்தது. இதில் மொத்தம் 5.8 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் சுவாரசிய நிகழ்வாக ஒடிசாவின் புல்பானி தொகுதியின் 58 வயது எம்.எல்.ஏ. அங்கத கன்ஹார் என்பவரும் தேர்வு எழுதியுள்ளார்.

ஆளும் பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த கன்ஹார் ருஜாங்கி உயர்நிலை பள்ளியில் தனது இரு நண்பர்களுடன் தேர்வெழுதினார். அவர்களில் ஒருவர் கிராம தலைவர் ஆவார்.

இதுபற்றி கன்ஹார் கூறும்போது, 1978ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்தேன். சில குடும்ப பிரச்சனைகளால் 10ம் வகுப்பு தேர்வெழுத முடியவில்லை.

சமீபத்தில், 50 வயதுடையோரும், அதனை கடந்தோரும் கூட தேர்வு எழுதுகிறார்கள் என என்னிடம் சிலர் கூறினர். அதனால், வாரிய தேர்வை எழுத நானும் முடிவு செய்தேன். கல்வி கற்பதற்கோ அல்லது தேர்வு எழுதுவதற்கோ வயது தடையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Odisha BJD MLA appears for Class X examination

இதையும் படிங்க: International Labour Day: மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதல்-அமைச்சர் வாழ்த்து