Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டம் என் ஆர் புரா தாலுகா பன்னூர் கிராமத்தில் அனிதா 25 வயது இவர் அங்கே ஒரு காபித்தோட்ட குடியிருப்பு பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார்
சொந்த ஊர் தாவணகெரெ மாவட்டம் ஒன்னல்லி தாலுகா வட்டடா கிராமத்தைச் சேர்ந்த இவர் இன்று காலை குடியிருப்பு பகுதி அருகே பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்ற பொழுது திடிரென அந்த வழியாக வந்த காட்டு யானை அவரை துரத்தி தும்பிக்கையால் தூக்கி வீசியது
பலத்த அடிபட்ட அவரை உடனடியாக பாலேஹோன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிமோகா கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார் பின்னர் அவரது உடலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது இறந்த பெண்ணிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மேலும் நிரந்தரமாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அவைகளை காட்டுக்குள் ஓட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் ஏழு பேர் வரை காட்டு யானை தாக்கி இறந்துள்ளனர் நிரந்தரமாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி மனிதர்களையும் கொள்ளுவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினர் இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த கன்னட அமைப்புகள் மற்றும் பலரும் ஒன்று சேர்ந்து நிரந்தர போராட்டத்திலும் ஈடுபட்டனர் முன்னாள் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் ஜீவராஜ் தலைமையில் இறந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்



