Erode Murder: செல்போனில் வாக்குவாதம்.. ஈரோட்டில் இருவர் குத்திக் கொலை

ஈரோடு: Two people stabbed to death in Erode. ஈரோட்டில் குடும்பத் தகராறு காரணமாக அண்ணன்- தம்பி இருவர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர்களுக்கு கௌதம் (வயது 30), கார்த்தி (வயது 26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கார்த்தி, நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் பொருளாளராக இருந்து வந்தார். அதோடு, கௌதம், கார்த்தி இருவரும் செக் எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் போன்றவற்றை வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர்.

இவர்களுக்கும், அவரது தாய்மாமாவான மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமிக்கும் முன்விரதம் இருந்து வந்தது. இதனையடுத்து, கௌதம், கார்த்தி ஆகியோர் ஆறுமுகசாமிக்கும் செல்போனில் பேசிக் கொள்ளும்போது வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் கௌதம், கார்த்தி ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது, அவர்களது வீட்டுக்கு வந்து ஆறுமுகசாமி தகராறு செய்து உள்ளார். சத்தம் கேட்டு கௌதம், கார்த்தி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.அப்போது அண்ணன் தம்பிக்கும், ஆறுமுகசாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை கார்த்தி செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கௌதமனையும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அங்கேயே சரிந்து விழுந்தனர். பின்னர் ஆறுமுகசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பின்னர், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் பலனளிக்காமல் அவர் கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆறுமுகசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அண்ணன், தம்பியை கத்தியால் குத்தி கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.