Union Budget 2023: மத்திய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்

புதுடெல்லி: Union Finance Minister Nirmala Sitharaman will present the Union Budget for the year 2023-24 in the Lok Sabha today. 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. குடியரசுத்தலைவரின் உரைக்குப்பின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார். வருமான வரி விலக்கு உச்சவரம்பு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாத நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த பட்ஜெட்டில் மாத ஊதியதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.