youth Murder: பழிக்குப்பழியா? : இளைஞர்கள் கொலையால் பதற்றம்

சென்னை: Tension due to the serial killing of youth : திருவள்ளுவர் அருகே இரண்டு இளைஞர்கள் பழிக்கு பழியாக தொடர்ந்து கொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்ற‌ம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து கொலைகள் தொடராமல் இருக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அருகே உள்ள‌ திருவள்ளூர் தொட்டிக்கலை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவ‌ர் வேலு (30). வெல்டிங் தொழிலாளியான இவர், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவரது நண்பர்கள் செல்வா (26), கோகுல், ஸ்டாலின் ஆகியோருடன் செவ்வாப்பேட்டை அருகே (Near Chevvaipet) மது அருந்தும் போது பலகாரம் வாங்கி வருவதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் வேலுவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பாக‌ செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து, ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து (3 Special Team) கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே போலீஸார், வேப்பம்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தப்போது. இரு சக்கர வாகனத்தில் (two-wheeler) வந்த இளைஞர்களை மறித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே, இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வேலு கொலைக்கு பழிக்கு பழியாக திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (21) என்பவரை கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் உள்பட மேலும் 4 பேரை கைது செய்த செவ்வாய்பேட்டை போலீஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே பழிக்கு பழி தொடர் கொலைகளால் (serial killings) அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பழிக்கு பழி கொலைகள் மேலும் தொடராமல் இருக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.