Seizure of 8 kg Cannabis: அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல: இருவர் கைது

திருவள்ளூர்: Seizure of 8 kg Cannabis smuggled in government bus. கும்மிடிப்பூண்டி அருகே அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக – ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து ஆரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 8கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தாய், மகனை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தமிழக – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர அரசுப் பேருந்து ஒன்றில் சோதனையிட்டனர்.

இதையும் படிங்க: TN Police Constable exam 2022 : இன்று காவலர் தேர்வு : 3,552 பணியிடங்கள், 3.66 லட்சம் பேர் போட்டி

சோதனையில் பயணிகள் இருவர் கொண்டு வந்த பையில் பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 8கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்த உசிலம்பட்டியை சேர்ந்த தாய் சசிகலா, மகன் பால்பாண்டி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிலர் கூறுகையில் தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடி அடிக்கடி கஞ்சா போதை மாத்திரைகள் உள்ளிட்டவை தமிழகத்திற்கு கடத்தி வருவதாகவும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இது போன்று போதை சம்பந்த பொருட்களை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Police seized 8 kg of ganja smuggled in a government bus near Gummidipoondi.