Murder near Erode: ரம்மி விளையாடியபோது தகராறு: கூலித்தொழிலாளி கடப்பாறையால் தாக்கி கொலை

குழந்தை வெள்ளையாக இருந்ததால் பூட்டால் தாக்கி கொடூரமாக கொன்ற தந்தை
கன்னட நடிகர் குத்திக் கொலை

ஈரோடு: A laborer was beaten to death in a dispute over rummy near Erode. ஈரோடு அருகே ரம்மி விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் முல்லை சக்தி என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், தற்காலிக கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர். இவர்கள் பவானி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள அயரோனிபுரம் பகுதியை சேர்ந்த சுஷின் (40), மருங்கூர் தாலுகா ராஜாவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரும் ரம்மி (சீட்டு) விளையாடிக் கொண்டிருந்தபோது, இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. இதில் ரமேஷ் என்பவர் அங்கிருந்த கடப்பாரையால் சுஜின் என்பவரை தலைமுகம் மற்றும் உடல் முழுவதும் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து ரமேஷ் கொலை நடந்த இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் குறித்து கோபி காவல் துணை கண்காணிப்பாளர், கவுந்தப்பாடி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா களம்பூரை அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நோமிநாதன் (வயது 14). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சக்திவேல் (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தான். இவர்களும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களான இம்ரான், ஜீவஜோதி, தாமரை ஆகியோரும் நண்பர்களாவர்.

இவர்களது ஊருக்கு அருகில் கீழ்ப்பட்டு கிராமத்தில் கல்குவாரி அருகே கரிகுன்று பகுதியில் குட்டை உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் குட்டையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. மாணவர்கள் 5 பேரும் அந்த குட்டைக்கு சென்று குளித்தனர். இதில் எதிர்பாராத விதமாக நோமிநாதன், சக்திவேல் ஆகிய இருவரும் குட்டையில் உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டு அருகில் இருந்த பொதுமக்களை அழைத்துள்ளனர். உடனே அங்கு வந்த பொதுமக்கள் சிறுவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடனே அங்கு வந்த 108 ஆம்புலன்சில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து பரிசோதனை செய்ததில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து வந்த களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், எஸ்.ஐ. விநாய மூர்த்தி மற்றும் போலீசார் சிறுவர்கள் இரண்டு பேரின் உடலையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த சிறுவர்களின் பெற்றோர் களம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.